தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகர் பட்டியலில் டாப் இடத்தில் இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது கைவசம் ஏராளமாக படங்கள் உள்ள நிலையில் மனுஷன் மிகவும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி அவர் சிறந்த மனிதர் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏனெனில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு உயர்ந்ததால் பிறரை மதிக்கும் குணமும் உதவும் குணமும் சிவகார்த்திகேயனுக்க சற்று அதிகம். தற்போது அதை நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனை பலரும் பாராட்டி தள்ளி வருகிறார்கள்.
ஆர்ஆர்ஆர் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது இயக்குனர் ராஜமெளலி குறித்தும் படக்குழுவினர் குறித்தும் சிவகார்த்திகேயன் மிகவும் ஜாலியாக பேசி அனைவரையும் கவர்ந்தார்.
எனக்கும் ஆர்ஆர்ஆர் படத்துக்கும் ஒரு கனெக்சன் இருக்கு….! ஓபனாக போட்டு உடைத்த உதயநிதி….!
பின்னர் நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் விஜய் நன்றி தெரிவித்தனர். அப்போது ட்ரம்ஸ் வாசித்தவரின் பெயரை சொல்ல மறந்து விட்டனர். இதை கவனித்த சிவகார்த்திகேயன், மேடைக்கு கீழே இருந்தவாறே சைகையில் ட்ரம்ஸ் வாசிப்பவரின் பெயரை சொல்லும்படி கூறினார்.
அவருக்கும் நன்றி கிடைக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் செய்த இந்த செயலையும் அவரின் நல்ல மனதையும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்த அடுத்த நிமிடமே ட்விட்டரில் #Sivakarthikeyan என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவரை வைரலாக்கவும் தொடங்கி விட்டார்கள்