நம்ம நீர்வளத்துறை அமைச்சருக்கு இவ்வளவு பெரிய அழைப்பா..!! வேற லெவல் தான்ப்பா!
நம் தமிழகத்தில் தற்போது நீர்வளத்துறை அமைச்சராக காணப்படுகிறார் துரைமுருகன். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன். தினந்தோறும் தமிழகத்தின் நீர் வளம் மற்றும் அணை விவகாரம் பற்றி கருத்து கூறி வரும் நிலையில் இவருக்கு மிகப்பெரிய அழைப்பு விடுத்துள்ளதாக காணப்படுகிறது.
அந்த அழைப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான அமைப்பாக உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஓஎஸ் வாட்டர் மாநாட்டுக்கு துரைமுருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரிஸ்பேனில் நடைபெறும் ஓஎஸ் வாட்டர் 2022 மாநாட்டில் பங்கேற்க வருமாறு அமைச்சர் துரைமுருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆஸ்திரேலிய கவுன்சில் ஜெனரல் சரா கிர்லீவ் அழைப்பு விடுத்துள்ளார். சந்திப்பின்போது கவுன்சில் கமர்சியல் அப்துல் எக்ரம், ஆஸ்திரேலிய அரசின் வணிக முதலீடு இயக்குனர் வினோத் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக நீர்வளத் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெருமைப்பட வேண்டிய விஷயமாக காணப்படுகிறது.
