ஐயோ ஃபேஸ்புக்கிற்கா இந்த நெலமை.. இதை நாங்க எதிர்பாக்கலையே!
உலக அளவில் அதிக அளவிலான பயனாளர்களைக் கொண்ட ஒரு சமூக வலைதளமாக இருப்பது ஃபேஸ்புக் நிறுவனம்.
ஃபேஸ்புக் நிறுவனமானது கலிபோர்னியாவின் மென்லோ பூங்காவில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்பக் குழு என்பது நாம் அறிந்ததே.
மேலும் இந்த நிறுவனமானது இதுவரை 193 கோடி பயனர்களைக் கொண்டதாக உள்ளது. ஃபேஸ்புக்கின் சேய் நிறுவனங்கள்தான் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகும்.
உலகில் கூகுள், அமேசான், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் தரவரிசையில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக ஃபேஸ்புக் உள்ளது.
ஏறக்குறைய 18 ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களை ஆட்கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது பெரும் சரவினைச் சந்தித்து வருகின்றது.
அதாவது பேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டாக் மற்றும் யூடியூப் போன்றவை ரசிகர்களைக் கவர்ந்தநிலையில் அதன் பயனர்கள் அதிகரித்து வருவதால் பேஸ்புக்கில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் டிக்டாக் மற்றும் யூடியூப் தளங்களில் விளம்பரம் செய்யக் கொடுக்கும் தொகையினைவிட ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யக் கொடுக்கும் தொகை குறைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது
