நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று மாலை சூர்யா நடித்து வரும் 40வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் வைரலாகி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு இதே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது
இந்த நிலையில் சற்று முன்னர் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சூர்யா நடித்து வரும் 39வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தை ஞானவேல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
#EtharkkumThunindhavanThirdLook@Suriya_offl @pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial#EtharkkumThunindhavan #ETthirdlook #ET #எதற்கும்துணிந்தவன் #HappyBirthdaySuriya pic.twitter.com/PwCnaJod3t
— Sun Pictures (@sunpictures) July 23, 2021