அடுத்தடுத்து வரும் அரசுகள் மதுவிற்பனையில் மட்டும் ஒத்துப்போகின்றன!!!: நீதிபதிகள்

ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சி முந்தைய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை புறக்கணித்து கொண்டுவரும். இதுகுறித்து சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியினர் குரல் கொடுப்பார்கள்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஹை கோர்ட் அறிவுறுத்தல்களை கூறியுள்ளது. அதன்படி முந்தைய அரசின் திட்டங்கள் சமுதாயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் எனில் அடுத்து வரும் அரசுகளும் அதனை தொடரலாம் என்று சென்னை ஹை கோர்ட் கூறியுள்ளது.

மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் ஆய்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளது. திட்டங்களை மறு ஆய்வு செய்யும் போது அதற்கு செலவிட்ட பெரும் தொகையை புதிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிலையம் தொடர்பாக சென்ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். மேலும் தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் மது விற்கும் கொள்கை முடிவில் அடுத்தடுத்து அரசுகள் ஒத்துப்போகின்றன என்றும் நீதிபதிகள் கருத்தினை வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment