அடுத்தடுத்து சிக்கும் அதிமுக அமைச்சர்கள்! வறுத்தெடுக்கும் வழக்குகள்!!

கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து தற்போது வலுவான எதிர் கட்சியாக மாறியுள்ளது அஇஅதிமுக. இந்த நிலையில் அதிமுக கட்சியின் முக்கிய அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்றது.

அதில் பல அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் பணத்தினை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.அதோட அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சரோஜா இந்த நிலையில் மற்றொரு முன்னாள் அமைச்சர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக காணப்படுகிறது.

அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, வேலை வாங்கித் தருவதாக கூறி 25 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி குணசீலன் மனைவிகளிடம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் தற்போது முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment