
News
அனைத்திலும் திமுக கையே ஓங்கியுள்ளது!! மாவட்ட கவுன்சிலர் இடங்களில் வெற்றி நிலவரம்!!!
அனைத்திலும் திமுக கையே ஓங்கியுள்ளது!! மாவட்ட கவுன்சிலர் இடங்களில் வெற்றி நிலவரம்!!!
தற்போது நம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையாக காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் திமுகவே வெற்றி பெற்றுள்ளதாக காணப்படுகிறது.
இதனால் திமுகவின் கை இந்த தேர்தலிலும் ஓங்கியுள்ளது. தற்போது மாவட்ட கவுன்சிலர் இடங்களில் வெற்றி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 14 இடத்தை பிடித்துள்ளது.
மேலும் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியில் ஒரு இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் எதிர்க்கட்சியான அதிமுக வெற்றிபெற்றுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 11 மாவட்ட கவுன்சில் இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக எட்டு இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகியவை தலா 1 வெற்றி பெற்றுள்ளது.
திருப்பத்தூரில் மொத்தம் 13 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 11 இடங்களிலும் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருபத்தி எட்டு மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 26 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் திமுக கூட்டணி ஒரு இடத்திலும், அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் அனைத்தையும் கைப்பற்றியது திமுக.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 13 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
ராணிப்பேட்டையில் 13 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 12 திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 11 இடங்களிலும், காங்கிரஸ் கட்சியானது ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்காசியில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 10 இடங்களிலும், காங்கிரஸ் மூன்று இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் பல மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் இடங்களை திமுக வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
