அதிகரிக்கும் இந்திய ராணுவ பலம்; பிரலே ஏவுகணை சோதனை வெற்றி!: டிஆர்டிஓ தகவல்;

இந்திய அரசாங்கம் தற்போது ராணுவத்தில் மிக முக்கியத்துவத்தை செலுத்தி வருகிறது. அதோடு ஆசிய நாடுகளில் வலிமையான ராணுவ பலத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் நாளுக்கு நாள் இந்திய ராணுவம் பலப்படுத்தி கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக சில நாட்களாக ஏவுகணை தாக்குதலில் இந்திய ராணுவம் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று பிரலே ஏவுகணை சோதனையில் வெற்றி அடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை டி.ஆர்.டி.ஓ கூறியுள்ளது. அதன்படி அணு ஆயுதம் தாங்கி செல்லும் இந்த பிரலே ஏவுகணை சோதனையில் வெற்றி அடைந்தது. பிரலே ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தின் அப்துல்கலாம் தீவில் இருந்து செலுத்தப்பட்டது. ஒரு டன் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய பிரலே ஏவுகணை சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது என்று கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment