Connect with us

21 மாநகராட்சியில் சக்சஸ்! 100% தடுப்பூசி திட்டம் வெற்றி!!: அமைச்சர் மா.சுப்பிரமணியன்;

covidd 1

செய்திகள்

21 மாநகராட்சியில் சக்சஸ்! 100% தடுப்பூசி திட்டம் வெற்றி!!: அமைச்சர் மா.சுப்பிரமணியன்;

21 மாநகராட்சியில் சக்சஸ்! 100% தடுப்பூசி திட்டம் வெற்றி!!: அமைச்சர் மா.சுப்பிரமணியன்;

இன்றைய தினம் இந்த தமிழகத்தில் 19வது மிக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருபத்தோரு மாநகராட்சிகளில் 100% தடுப்பூசி திட்டம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2580 ஊராட்சிகளில் 100% ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

சென்னையை பொருத்தவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 661 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆனால் சென்னையில் இதுவரை 38 ஆயிரத்து 850 பேருக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களால் தான் கொரோனா உயிரிழப்பு நிகழ்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் 1.71 லட்சம் சிறார்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளவர்கள் என்றும் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 89% பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 65% பேரும் செலுத்தி உள்ளனர் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top