இருளர் பழங்குடிக்கு தரமற்ற கட்டிடம்: 2 பேர் பணியிடை நீக்கம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் சுமார் 3.5 கோடி மதிப்பீட்டில் இருளர் பழங்குடியினருக்கான 76 புதிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வழக்கு: இன்று தீர்ப்பு!!

இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் கட்டிட ஒப்பந்ததாரர் பாபு என்பவரை அழைத்து இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

ஒப்பந்ததாரரின் பதிலால் திருப்தி அடையாத மாவட்ட ஆட்சியர் ஏழைகளுக்காக கட்டப்பட்டும் வீடுகளை இவ்வாறு தரமற்ற முறையில் கட்டுவதா? என்ற கேள்வியை எழுப்பினார். இது எந்த விதத்தில் நியாயம் எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என பலமுறை எச்சரித்த போதிலும் இவ்வாறு நடந்து கொள்வதா? என கடிந்து கொண்டார்.

ஆதாரம் கிடைக்குமா? – அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

இதே நிலை நீடித்தால் ஒப்பந்ததாரரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் பிடித்துக்கொடுப்பதாக கூறினார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.