Connect with us

மாசமாசம் பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்.. செமயான திட்டத்தை அறிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர்

Untitled 120

செய்திகள்

மாசமாசம் பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்.. செமயான திட்டத்தை அறிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர்

மாசமாசம் பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்.. செமயான திட்டத்தை அறிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர்

பெட்ரோல் விலை ஒரு காலத்தில் 35 ரூபாய்க்கு விற்றதுபோய் தற்போது ஒரு லிட்டர் ரூ.100 க்கும் அதிகமாக விற்பனையாக வருகின்றது.

வண்டியை லோன் போட்டு வாங்குவது போய், வண்டிக்குப் போடும் பெட்ரோலுக்கும் லோன் போடணும் போல் என்பதுபோல் அல்லவா உள்ளது இன்றைய நிலைமை.

பொதுமக்களின் இந்தத் துயரத்தைத் தீர்க்க ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பெட்ரோலுக்கு மாதம் மாதம் ரூ.250 மானியம் வழங்கப்படும் என்ற திட்டத்தினை அமல்படுத்தி உள்ளார்.

அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு மாதந்தோறும் ரூ.250 மானியம் வழங்கப்பட உள்ளதாம்.

மேலும் மானியத் தொகையானது வங்கிக் கணக்கின் மூலம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பயனைப் பெற அரசாங்கத்தின் மொபைல் ஆப்பில் பதிவு செய்யக் கோர இது வரை 1.04 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஹேமந்த் சோரன் அறிவித்த இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top