அடுத்தடுத்த சுற்று முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஇஓ கிருஷ்ணனுண்ணி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திங்கள்கிழமை (பிப் 27) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, இதனால் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எச்.கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாகவும், நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு சுற்றுக்கான அதிகாரப்பூர்வ முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும்.

மேலும், “குறிப்பிட்ட நேரத்தில் முடிவுகளை வெளியிடுவது கட்டாயமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#Thalaivar170: சூர்யா பட இயக்குநருடன் கரம் கோர்ந்த சூப்பர் ஸ்டார்; 170வது படம் குறித்து வெளியானது அறிவிப்பு!

தற்போது 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, 4 சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.