இந்தோனேசியா, பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தினந்தோறும் மனிதன் பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை செய்து கொண்டு வருகிறான். அதுவும் குறிப்பாக மனிதனின் கண்டுபிடிப்புகள் இன்றியமையாததாக காணப்படுகிறது. என்ன தான் மனிதனின் கண்டுபிடிப்புகளில் இன்றியமையாததாக இருந்தாலும் அது இயற்கை முன்பு தவிடு பொடியாக்கியது.
இயற்கை சீற்றத்தை தடுக்க எந்த ஒரு மனிதனின் கண்டுபிடிப்பும் இல்லை என்பது தவிர்க்கமுடியாத உண்மையாகவே காணப்படுகிறது. சுனாமி, வெள்ளம், நிலநடுக்கம், காட்டுத்தீ போன்றவற்றினை ஏற்படாமல் தடுக்க மனிதனால் கூடாத காரியமாக காணப்படுகிறது.
அதுவும் குறிப்பாக தற்போது உலகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்றாக காணப்படுகிறது. அதன்படி இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அன்மை தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. பிலிப்பைன்ஸ் லூசன் தீவிலும் 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
