ரஜினிகாந்த் பற்றி சுப்பிரமணியன் கூறியதால் ஹேப்பியான ரசிகர்கள்!!

சில நாட்களுக்கு முன்பு சினிமா துறையில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிடைத்தது. அதனை பெற்று அவர் சென்னை வந்தவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

சுப்பிரமணியன்அவரின் மருத்துவமனை சேர்க்கை பற்றி அவரின் மனைவியும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா சுப்பிரமணியன் ரஜினி நலமுடன் உள்ளார் என்று கூறியுள்ளார்.

அதன்படி ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது என்றும் மா சுப்பிரமணியன் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் நடிகர் ரஜினி நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினரும் தெரிவித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார், அவர் உடல் நலத்துடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என்று ஒய்.ஜி மகேந்திரன் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரின் உடல் நலம் பற்றி தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment