சுபாஷ்கரன், சபாஷ்கரன் ஆகிவிட்டார்: ரெட்கார்டு நீக்கிய சந்தோஷத்தில் வடிவேலு!

cb1625d1a268a7a8acf90a5e84fbf847

பிரபல நடிகர் வடிவேலு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது. இதனால் அவர் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 

இந்தநிலையில் அவரது பிரச்சனைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு தற்போது ரெட்கார்ட் நீக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மகிழ்ச்சியுடன் விரைவில் தமிழ் சினிமாவில் வலம் வர உள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், முதன் முதலில் சினிமாவில் நடிப்பதற்காக வந்தது போன்ற உணர்வு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எனக்கு ரசிகர் மன்றம் இருக்கிறது என்றும் ரெட்கார்டு நீக்கப்பட்டது எனக்கு மறுபிறவி என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சுராஜ் இயக்க இருப்பதாகவும் இது தவிர இன்னுமொரு படத்தில் கதாநாயகனாக நடித்து விட்டு அதன்பின் மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு ரெட் கார்ட் நீக்கப்பட்டதில் பெரும் பங்கு லைகா சுபாஷ்கரன் அவர்களுக்கு உண்டு என்றும் அவர் தற்போது மக்கள் மத்தியில் சபாஸ்கரன் ஆகிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.