சுபகிருது எப்படி இருக்கும்? தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் இதோ!

தமிழ் ஆண்டுகளில் உள்ள அறுபது ஆண்டுகளில் 35 வது ஆண்டான பிலவ வருடத்தில் இருந்து 36வது ஆண்டானது சுபகிருது ஆண்டானது வரும் சித்திரை 1 ஆம் தேதி பிறக்கின்றது.

புத்தாண்டு அன்று காலை தாம்பூலத்தில் மல்லிகைப் பூ, தங்க ஆபரணங்கள், பழங்கள், கண்ணாடி என அனைத்தையும் குடும்பத்தார் கண் படும்படி வைத்து காலையில் எழுந்ததும் விழித்தால் சுப கிருது ஆண்டு அளிக்கும் அத்தனை சுபமும் கிடைக்கப் பெறும்.

சுபகிருது ஆண்டு 2022 ஏப்ரல் மாதம் துவங்கி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்ற பஞ்சாங்க கணிப்பினைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

சிம்மம் ராசி பூர நட்சத்திரம் ரிஷப லக்கனத்தில் பிறக்கும் சுபகிருது ஆண்டு சிறப்பான ஆண்டாகும். வேலைவாய்ப்பு ரீதியாக பார்க்கையில் முடங்கிப் போன பெரிய தொழில் நிறுவனங்களும் மீண்டும் இயங்கும், அதனால் பல லட்சம் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.

செவ்வாய் ராகுபகவான் சேர்க்கையால் ஜூன் முதல் ஆகஸ்ட் காலகட்டங்களில் நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. மேலும் ஆகஸ்ட் மாத வாக்கில் ஐடி தொழில் சார்ந்து பணிபுரிபவர்களுக்கு பணிச் சுமை குறைந்து காணப்படும்.

பண வரவுகளும், சேமிப்பும் அதிகரிக்கும், அதிலும் ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்களுக்கு சாதகமாக கால கட்டமாகும். சுபமான செய்திகளைக் கொடுக்கும் வருடமான இந்த வருடம் கடந்த ஆண்டுக் கஷ்டங்களைத் துடைத்து இன்பங்களைக் கொடுக்கும் ஆண்டாகும்.

விவாகரத்து அதிகம் உள்ள ஆண்டாக இருக்கும், மேலும் தொழில் கூட்டாளர்கள் இடையே பல பிளவுகள் ஏற்படும். பெண்களுக்கு அதிக உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.

நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரும் மாற்றத்தைக் காணலாம். தங்க விலையில் சீரான மாற்றம் இருக்கும். வியாழக் கிழமை பிறக்கும் இந்த ஆண்டு பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பினை ஆட்சியாகக் கொண்டு பிறப்பதால் மக்களின் வாழ்வில் ஒளி பிறப்பிக்கும்.

தொழில் ரீதியாக வேலை பார்ப்போருக்கு தடுமாற்றங்கள் இருந்தாலும், ஆண்டின் பிற்பாதி சிறப்பான முன்னேற்றத்திற்கு வழிகோலும். மே மாதம் முதல் ஜூன் மாத கால கட்டங்கள் இடம், பொருள், வீடு, மனை வாங்கும் யோகங்கள் உண்டு.

பங்குச் சந்தை இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவு பெரும் பங்கினை வகிப்பதாய் இருக்கும். கலப்புத் திருமணங்கள் அதிக அளவில் நாட்டில் நடக்கப் பெறும்.

மேஷம் முதல் மீனம் வரை ராசிவாரியாக பலன்கள் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மேஷம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

ரிஷபம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

மிதுனம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

கடகம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

சிம்மம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

கன்னி: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

துலாம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

விருச்சிகம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

தனுசு: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

மகரம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

கும்பம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

மீனம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.