Connect with us

ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்!!-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு;

Election Commission PTI 0

செய்திகள்

ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்!!-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு;

இந்தியாவில் தற்போது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் குறித்த தகவல்கள் அதிக அளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தல் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

மேலும் ஆளும் கட்சியான பாஜக இந்த முறையை குடியசுத் தலைவர் வேட்பாளராக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான மனு தாக்கல்  ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19ஆம் தேதி தான் கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 20-ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்பப் பெற ஜூலை 22-ஆம் தேதி கடைசி நாளாகும். ஆறாம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவடைகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top