பெரியார் சிலை குறித்து அவதூறு பேச்சு! ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது!

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரின்பேரில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்துமுன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தின் போது பெரியார் சிலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக இரு பிரிவினரிடையே கலக்கம் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்தார். இந்தச் சூழலில் பாண்டிச்சேரியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனிடையே தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்துள்ளனர். மேலும், சென்னை அழைத்துக்கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment