Connect with us

சிங்கார சென்னையை அழகு படுத்துவதற்கு அசத்தல் அறிவிப்பு !!

82716

Tamil Nadu

சிங்கார சென்னையை அழகு படுத்துவதற்கு அசத்தல் அறிவிப்பு !!

சிங்கார சென்னையை அழகு படுத்துவதற்கு அசத்தல் அறிவிப்பு !!

2022-2023 ஆண்டிற்கான பட்ஜெட் நிதி நிலை அறிக்கையாயை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சுமார் 2000 கோடிக்கு அதிகமான நிதி மதிப்பீட்டில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 3 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அனைத்து மண்டலங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் படிப்படியாக அமைக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2.0 திட்டத்தில் சிங்கார சென்னையை அழகுபடுத்த 26 இடங்களில் ரூ. 1.26 கோடி செலவில் நீரூற்றுகள் அமைக்கப்படும் என்றும் சாலை மட்டும் தெருக்களின் பெயர்களை டிஜிட்டல் முறையில் மாற்ற ரூ. 8. 43 கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள 1000 பேருந்து நிழற்கூடங்கள் மேம் படுத்துவதாகவும், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை பராமரிக்க ரூ. 16.35 கோடி ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் 2.5 மரக்கன்றுகள் நடப்பட்டு பாராமரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top