ஈவினிங் ஸ்நாக்சாக சூடா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாமா! ரெசிப்பி இதோ!

மிளகாய் பஜ்ஜி நாம் வீடுகளில் செய்வது உண்டு , இந்த முறை புதிதாக ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாமா…இதோ பாருங்க

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 1 கப்

பஜ்ஜி மிளகாய் – தேவைக்கு ஏற்ப

வெங்காயம் – 2

பூண்டு – 4 பல்

இஞ்சி – 2 தேக்கரண்டி

அரிசி மாவு – 1/2 கப்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – சிறிது

உப்பு – சுவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை கீறி விதையை வெளியே எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்த்து கொள்ளவும்.

நெஞ்சு சளி அதிகமாக இருந்தால்… சிக்கன் சூப் குடிக்கலாம் வாங்க…

மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews