வெளிநாட்டில் படிச்சா மட்டும் போதாது! இந்தியாவில் வேலை கிடைக்குமான்னு பார்க்கணும்!!

இந்தியாவில் படித்த இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பலரும் தவறான பாதைக்கு செல்கின்றனர். ஒருசிலர் வெளிநாடுகளில் தங்களது மேற்படிப்பு படிக்க செல்கின்றனர்.ஏஐசிடிஇ

அவ்வாறு வெளிநாடுகளில் படிக்க  செல்பவர்களுக்கு தடையில்லா சான்று பெறுவது அவசியம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்கள் அனைவரும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் மாணவர்கள் அதிக கவனத்துடன் தங்கள் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கு இணையில்லாத படிப்பை வெளிநாட்டில் படித்து வருவதால்தான் அவர்களுக்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் ஏ.ஐ.சி.டி.இ  கூறியுள்ளது.

அதனால்  வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு இந்தியாவில் வேலை கிடைக்குமா? என்பதை சரி பார்த்த பின்பு தான் சேர வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ கூறியுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ கூறிய அறிவிப்பு வெளிநாடுகளில் சென்று படிக்கும் பல மாணவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்துள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment