Connect with us

மாணவி ஸ்ரீமதியின் ஆய்வு அறிக்கை: வெளிவந்த புதிய தகவல்!

Capture 28

தமிழகம்

மாணவி ஸ்ரீமதியின் ஆய்வு அறிக்கை: வெளிவந்த புதிய தகவல்!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பரிசோதனையின் ஆய்வு தொடர்பான அறிக்கையை ஜிப்மர் மருத்துவக் குழுவினர் இன்று அல்லது நாளை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருநது குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது

இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஸ்ரீமதியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தங்களது சட்டப்போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாணவியின் முதற்கட்ட பிரேத் பரிசோதனையில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவின் படி. 2-ம் கட்ட பிரேத பரிசோதனை மருத்துவக்குழு செய்தனர். தற்போது இரண்டு பிரேத பரிசோதனையின் முடிவுகளை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மாணவி ஸ்ரீமதி பரிசோதனையின் ஆய்வு அறிக்கையின் முடிவுகளானது விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top