என்ன வேணா நடக்கட்டும் எனக்கு படிப்பு தான் முக்கியம்… வைரலாகும் சிறுவனின் வீடியோ…..

நாளுக்கு நாள் சோசியல் மீடியாக்களில் ஏதாவது ஒரு செயல் வைரலாகி வருகிறது. நாள்தோறும் நாம் சோசியல் மீடியாவை திறக்கும்போது ஏராளமான விஷயங்களை அதில் காண்கிறோம். பலர் தாங்கள் பார்க்கும் சில அபூர்வமான விஷயங்கள் அல்லது நகைச்சுவையான செய்கைகளை வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்கள்.

studyy 1

அந்த வகையில் தற்போது ஒரு சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனின் தந்தை கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் கையேந்தி பவன் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் சிறுவனின் தந்தை மிகவும் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்.

ஒருபுறம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் போடும் சத்தம் மற்றொரு புறம் சாலையில் செல்லும் வாகனங்களின் இரைச்சல் என அந்த இடமே மிகுந்த இரைச்சலால் நிரம்பி உள்ளது. இந்நிலையில் இந்த சத்தத்திற்கும் இடையில் ஒரு சிறுவன் அங்கு அமர்ந்து கையில் புத்தகத்தை வைத்துகொண்டு மிகவும் ஆர்வமாக படித்துக்கொண்டு இருந்துள்ளான்.

படிக்கும் பிள்ளை எங்கு வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் படிக்கும் என கூறுவார்கள். அதற்கு உதாரணமாக தற்போது இந்த சிறுவனின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மேலும் பலரும் அந்த சிறுவனுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

தனது பெற்றோர்களின் கஷ்டம் அறிந்து தான் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும். தாய் தந்தையை பார்த்து கொள்ள வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் அந்த சிறுவன் சுற்றி இருக்கும் இரைச்சலை கண்டு கொள்ளாமல் புத்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தி படிக்கும் செயல் அங்கு வந்த வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment