அடுத்த படம் சூர்யாவா, கார்த்தியா, முக்கியமான அறிவிப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 6 மணிக்கு வெளியிடுகிறது

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதில் மிக முக்கிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரித்ததை விட சூர்யா மற்றும் கார்த்தியை வைத்தே அதிக படம் தயாரித்துள்ளது.

இதன் தயாரிப்பாளர் கே.இ ஞானவேல்ராஜா இவர் நடிகர் சிவக்குமாரின்  உறவினர் ஆவார். இதனால் இவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி ஏற்பட்டு சூர்யா, கார்த்தி படங்களையே இவர் அதிகம் தயாரிக்கிறார்.

அப்படி தயாரிக்கப்படும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பருத்திவீரன் , சிங்கம்,சிறுத்தை, நான் மகான் அல்ல,அலெக்ஸ் பாண்டியன், கொம்பன் உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது. அது என்ன அறிவிப்பு அது கார்த்தி படமா அல்லது சூர்யா படமா என்பது 6 மணி வந்தால்தான் தெரியும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment