Connect with us

அடிதூள்: அரசு பள்ளியில் படித்தவரா? மருத்துவ படிப்பிற்கு திமுக, நிதி உதவி..!

student

செய்திகள்

அடிதூள்: அரசு பள்ளியில் படித்தவரா? மருத்துவ படிப்பிற்கு திமுக, நிதி உதவி..!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்தால் அவர்களுக்கு திமுக சார்பில் நிதி வழங்கப்படும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்துள்ள அகரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும்145 மாணவ மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று 19.09.22 நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில்  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார் பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  :- 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு  திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்படும் இது இந்த வருடம் முதல் நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top