Connect with us

10 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்..!!

202201120450192034 For 10th and 12th grade students Diversion as planned Exam SECVPF

News

10 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்..!!

நம் தமிழகத்தில் நடக்கின்ற மே மாதத்தில்தான் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுத் தேர்வுக்காக மாணவர்கள் பலரும் ஆர்வமோடு தயாராகிக் கொண்டு வந்துள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தனிமனித இடைவெளியுடன் தேர்வு நடை பெற்றாலும் கூட மாஸ்க் அணிந்து தான் எழுத வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுத் தேர்வின் போது தடையின்றி மின்சாரம் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏகப்பட்ட இடங்களில் மின் வெட்டு நிகழ்ந்தாலும் பொது தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top