குட்நியூஸ்!! மாணவர்களுக்கு இனி இலவச சிற்றுண்டி… தமிழக அரசு அறிவிப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இந்து அறநிலையத்துறை சார்பில் 165 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பிகே சேகர்பாபு வெளியிட்டார். 21 திருக்கோயில்களில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.  1500 கோவில்களில் 1000கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

1000 கோவில்களில் 500கோடி மதிப்பீட்டில் என மொத்தம் 1500கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கலாச்சார மையம் முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படும் என  அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்தார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லாத காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment