Connect with us

கல்லூரிகள் திறந்ததும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்!!: அமைச்சர் கீதாஜீவன்

10001

Tamil Nadu

கல்லூரிகள் திறந்ததும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்!!: அமைச்சர் கீதாஜீவன்

கடந்த ஆட்சியில் நடைமுறையிலிருந்த தாலிக்கு தங்கம் திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது பலரிடமும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தத் திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்று கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகிறது. அதற்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்துள்ளார்.

அதன்படி கல்லூரிகள் திறக்கபட்டதும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தகவல் அளித்தார்.

மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித் தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் கீதாஜீவன் கூறினார். இதனால் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் சந்தோசத்தில் உள்ளனர். மேலும் இவை மேற்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவும் என்று தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top