மருத்துவப்படிப்புக்கு இந்தியாவை விட வெளிநாடுகளை தேர்வு செய்யும் மாணவர்கள்! என்ன காரணம்?

நம் இந்திய மாணவர்கள் நம் நாட்டை விட்டு விட்டு வெளிநாடுகளில் அதிக அளவு மருத்துவம் படிக்கின்றனர் அதற்கான காரணம் பற்றிய சில புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பேராக உள்ளது.

அதிலும் குறிப்பாக போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிப்பவர்களில் இந்தியர்கள்தான் 25% பேர் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நாட்டில் உள்ள 40க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகளில் முக்கியமான கல்லூரிகளில் இந்தியர்களே அதிகம் படிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் இந்தியாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் எண்ணிக்கை 7 முதல் 8 லட்சமாக காணப்படுகிறது. ஆனால் மருத்துவ இடங்கள் 90000 ஆயிரத்திற்கும் அதிகமாகவே நிரப்பப்படுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

நம் இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க ரூபாய் 30 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால் ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளில் 6 ஆண்டு மருத்துவ படிப்பு படிக்க வெறும் 20 முதல் 35 லட்சம் மட்டுமே செலவாகிறது.

பிரபலமற்ற மருத்துவ கல்லூரிகளில் படித்தால் ரூபாய் 18 முதல் 25 லட்சம் மட்டுமே செலவாகும் குறிப்பிடத்தக்கது. சீனாவில் மருத்துவம் படிக்க படிக்க 11 முதல் 13 லட்சம் மட்டுமே செலவாகிறது. இதனால் அதிக அளவு இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவ படிப்பு படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment