Connect with us

இனிமேல் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்க கூடாது!!

தமிழகம்

இனிமேல் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்க கூடாது!!

இனிமேல் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்க கூடாது!!

பல தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே நிற்க படுகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து தரக்குறைவாக பேசக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை முறையாக பின்பற்றப் படுகிறதா என உறுதிமொழி சான்றிதழும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏதேனும் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுதியளிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top