
தமிழகம்
நீச்சல் தெரியாமல் கல்குவாரியில் குதித்த மாணவிகள்-குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்;
பொதுவாக நீர்நிலைகளில் மாணவர்கள்தான் குளிக்கச் சென்று மூழ்கி விட்டு உயிர் இழந்துவிடுவார்கள். அதுவும் குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களுடன் நீர்நிலைகள் சென்று நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நம் தமிழகத்தில் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது.
இந்த நிலையில் தற்போது மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கல்குவாரியில் குளித்த பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கல்குவாரியில் குளித்த பள்ளி மாணவி ஆயிஷா மற்றும் வைஷ்ணவி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனால் அவர்களின் குடும்பத்தில் பெரும் சோகம் நிலவுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
