
News
கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை!!
உலக நாடுகளே வியந்து பார்க்கும் அளவிற்கு நம் இந்தியாவானது கொரோனா தடுப்பூசி செலுத்தும் சாதனையை செய்து இருந்தது. ஏனென்றால் குறிப்பிட்ட சில நாட்களிலேயே 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியினை செலுத்தி உலக நாடுகளை விஞ்சியது.
இந்த நிலையில் நம் இந்தியாவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகரில் தடுப்பூசி செலுத்தாத 12 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவர்களுக்கு நாளை முதல் நேரடி வகுப்புகளில் அனுமதி இல்லை என்றும் சண்டிகார் அரசு கூறியுள்ளது.
