Connect with us

45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: மனித உரிமை ஆணையத்தில் புகார்

Tamil Nadu

45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: மனித உரிமை ஆணையத்தில் புகார்

21b4909a3e42342e1fa5cb9ac1fb5b84

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி  மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. குடிநீர் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தர மறுப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு கூறி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்

இந்த போராட்டத்திற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 45 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது 

af8c9582f6557ddca2af0d941efb44a6

இந்த நிலையில் உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தர மறுப்பதாக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர் 

இந்த புகார் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top