பட்டா கத்தியுடன் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள்; 2 பேர் கைது!

சென்னை வியாசர்பாடி பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்தில் தொங்கியபடிம், பட்டாக்கத்தியை சாலையில் தேய்த்தபடியும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களின் பயணித்தனர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விவகாரம் தொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அதோடு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது ரகளையில் ஈடுப்பட்டது அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதனிடையே மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும், இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுப்பட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment