மாணவர்கள் சிறந்த வல்லுனராக மாற தமிழ்மொழியில் இன்ஜினியரிங் வேண்டும்!

தற்போது இன்ஜினியரிங் படிப்பு என்பது மாணவர்கள் மத்தியில் சற்று குறைவாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் இன்ஜினியரிங்  படித்தால் சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நேற்றையதினம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.

ஏஐசிடிஇ

இதுபற்றி நேற்றையதினம் புத்தக கண்காட்சியில் பேசியிருந்தார். ஜெர்மனி, ஜப்பான் போன்ற மேலைநாடுகளில் இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகள் அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கப்படுகிறது. இதனால் தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

இதேபோன்று நம் தமிழ்நாட்டிலும் தமிழ்மொழியில் இன்ஜினியரிங் படித்தால் அவர்களின் சிறந்த மாணவர்களாக வல்லுநர்களாக மாறுவார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட 44 சதவீத மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தங்கள் தாய்மொழியில் படிக்க விரும்பி உள்ளதாக கூறப்பட்டது.

அதிலும் குறிப்பாக தமிழ் இந்தியில் மீது மாணவர்கள் அதிகம் விரும்பியுள்ளனர். தாய் மொழிகளை கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம் பிறகு மக்கள் பிற மொழிகளை கற்க வேண்டும் முடியும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தாய் மொழியை வளர்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment