இனி ஆப்கானிஸ்தானில் மாணவ, மாணவிகள் டை(கழுத்துப்பட்டை) அணியத் தேவையில்லை…!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் அரசுதான் காணப்படுகிறது. அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தி கொண்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானின் வாழும் மக்கள் உணவிற்காக உடல் உறுப்புகளை விற்கும் அளவிற்கு காணப்படுகின்றனர். மேலும் பல கல்வி நிறுவனங்களில் பெண்கள் படிக்க அனுமதிக்கப் படவில்லை என்பதும் அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்படும் காணப்படுகிறது.
இதனால் அங்கு பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான அநீதிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது பள்ளி மாணவ மாணவிகள் கழுத்தில் டை அணிய தடை விதித்துள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தானில் டை அணிய தேவையில்லை என்று ஆப்கானிஸ்தானிய கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர்கள் டை அணிய அரசு தடை விதித்துள்ளது.
ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவியர்கள் கழுத்துப்பட்டை அணிய தேவையில்லை என ஆப்கானிஸ்தான் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி திறப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தாலிபன்கள் அரசு கூறியுள்ளது.
