நம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். அதன் பின்னர் அரையாண்டு விடுமுறை ஒருவாரத்திற்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை ஒன்பது நாட்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை இருக்கும் என்றும் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினத்தில் இருந்தே அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அரையாண்டு விடுமுறை தொடங்குவதாக கூறப்படுகிறது.
அதன்படி டிசம்பர் 25ஆம் தேதி சனிக் கிழமை தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ஜனவரி 3ஆம் தேதி திங்கள் கிழமை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.