Connect with us

மாணவிகளுக்கு ரூ.1000: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

College students Affordable

தமிழகம்

மாணவிகளுக்கு ரூ.1000: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்தல், பயிர் கடன் தள்ளுபடி செய்தல்,மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்துள்ளது.

அந்த வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அறிவித்திருந்தது.

இந்த திட்டத்திற்கு தகுதியான மாணவிகளிடம் வங்கு கணக்கு எண், சான்றிதழ்களை சேகரிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

இந்த சூழலில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியுடைய மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட இருந்தது.

தற்போது அரசு சார்பில் இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது ஜூலை 10-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top