டியூஷன் விட்டு வந்த மாணவர்கள் நீரில் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!!

தற்போது இயல்பை விட அதிக அளவு கனமழையானது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. பல அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.  பெரியகுளம் வராக நதி

இருப்பினும் ஒரு சில நேரங்களில் சிறுவர்கள் விளையாட்டுப் போக்கில் வேடிக்கை நீரை பார்க்க சென்று நீரில் அடித்துச் செல்லப்படுவது ஆங்காங்கே காணப்படுகிறது. அவ்வாறு அடித்து செல்லப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுவர்.

அதன்படி தேனி மாவட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியை வேடிக்கை பார்க்க சென்ற 2 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் 5 பேர் வராக நிதியை வேடிக்கை பார்த்தபோது அதில் இரண்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த சுந்தர நாராயணன், சென்னையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட இந்த இரண்டு மாணவர்களை பெரியகுளம் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment