செய்திகள்
மாணவர்களே ஆசிரியர்களை அடிக்காதீர்கள்!!: மாணவர்களிடம் கேட்டுக்கொண்ட டிஜிபி
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர்களின் அட்டூழியம் இணையதளத்தில் வைரலாக பரவியது. ஏனென்றால் அவர்கள் ஆசிரியர் ஒருவரை கைநீட்டி அடிக்கும் உயர்த்துவும் அவரை ஆபாசமாக பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார் .அதன்படி பள்ளிக்கூடம் தான் நமது வாழ்வாதாரம் ஆசிரியர்கள் தான் நமது ஆதரவாளர்கள் என்று கூறினார்.
கடவுளுக்கு மேலான ஆசிரியர்களிடமா இந்த வன்முறை என டிஜிபி சைலேந்திரபாபு வேதனை தெரிவித்தார். மாணவர்களின் சொத்துக்களும் ஆதாரங்களும் பள்ளியும் ஆசிரியர்களும் தான் என்றும் அவர் பேசினார்.
ஒரு சிந்தனையாளராக ஆற்றல் மிக்கவனாக தயாராக வேண்டிய இடம்தான் பள்ளிக்கூடம் என்றும் கூறினார். பள்ளி ஆசிரியர்களை தாக்குவது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடாதீர்கள் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். சட்டம் சில பாதுகாப்பு கொடுத்து இருந்தாலும் பள்ளிகளில் வன்முறையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்றும் கூறினார்.
