
தமிழகம்
மாணவர்களின் சான்றிதழ்கள் ஒன்றும் சந்தை பொருள் அல்ல!!: ஐகோர்ட்
தற்போது மருத்துவ கல்லூரிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் பெற்ற சான்றிதழ்களை உடனடியாக அவர்களிடம் திரும்ப வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியது. சான்றிதழ்களை திருப்பித் தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2018 முதல் 2021ஆம் கல்வியாண்டுகளில் மருத்துவம் படித்த 25 பேர் அரசு மருத்துவமனைகளில் 10 மாதங்கள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் தங்களது உண்மை சான்றிதழ்களை வழங்கும் படி கல்லூரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிக்காததால் சான்றிதழ்களை திருப்பி தரமுடியாது என்று கல்லூரிகள் மறுத்துள்ளன. தங்கள் உண்மையான சான்றிதழ்களை வழங்க கோரி 25 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மாணவர்களின் சான்றிதழ்களை இன்னும் 15 நாட்களில் திருப்பி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய ஒப்பந்த சட்டப்படி சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதி கூறினார்.
