Connect with us

நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்: காதலனிடம் தஞ்சமா?

தமிழகம்

நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்: காதலனிடம் தஞ்சமா?

52b61f2cddaefc9b13321b891ab35246-1

நீட் தேர்வு எழுதிய பள்ளி மாணவி ஒருவர் திடீரென மாயமாகி உள்ளதை அடுத்து அவர் காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற 17 வயது பள்ளி மாணவி சமீபத்தில் நீட் தேர்வு எழுதினார். இந்த நிலையில் திடீரென அவர் நீட் தேர்வு எழுதிய இரண்டே நாட்களில் மாயமானார். இதனை அடுத்து அவரது தந்தை செந்தில் பாண்டியன் மற்றும் தாயார் தங்கம் ஆகிய இருவரும் காவல்துறையில் புகார் அளித்தனர் 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஸ்வேதாவை தேடிவந்தனர். இந்த நிலையில் மாணவி ஸ்வேதா தேனியில் இருப்பதாக தகவல் வெளிவந்தது. மேலும் அவர் தேனி காவல் நிலையத்தில் தனது காதலனுடன் ஸ்வேதா தஞ்சம் அடைந்துள்ளதாகவும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது 

இதனை அடுத்து ஸ்வேதாவின் பெற்றோர்கள் தேனிக்கு விரைந்துள்ளனர். தேனி போலீசார் ஸ்வேதாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top