நேற்றைய தினம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைவிட எந்த ஒரு ஆண்டுக்கும் இல்லாத அளவில் நேற்றைய தினம் விடுப்பு எடுத்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது.
இவர்களின் மத்தியில் விபத்தின் போது கால் எலும்பு முறிந்தும் படுத்த படுக்கையாக மாணவி தேர்வு எழுதியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இவையெல்லாம் தாண்டி தமிழக அரசையே திரும்பிப் பார்க்கும் வகையில் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய சென்னை மாணவி சிந்துவின் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். விபத்தில் கால் எலும்பு முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வு எழுதிய சிந்துவை கண்டு பெருமிதம் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
தடைகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் முயன்று பார்க்கும் மன வலிமையை சிந்துவை பார்த்து மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். விபத்து காரணமாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மாணவி சிந்து பிளஸ் டூ தேர்வு நேற்று எழுதினார். மீண்டும் வாலிபால் ஆட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.