தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் தற்கொலை: சென்னையில் பரபரப்பு!!

சென்னையில் கல்லூரி மாணவர் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை அடுத்த மேலகோட்டையூர் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் வடமாநில இளைஞர் புத்தாலா ஓம்கிரீஸ் என்பவர் தேர்வு எழுதிகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இளைஞர் 6வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவனின் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.