Connect with us

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!!

201803051033512575 Drinking wine in a glass younger brother swallowed poison SECVPF

தமிழகம்

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!!

விழுப்புரம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மாம்பழபட்டு அடுத்துள்ள மல்லிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மாம்பழப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் தனது உறவினர் வாலிபரை திருமணம் முடித்துவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய திருமணத்திற்கு மாணவி மறுப்பு தெரிவித்து இருந்ததாகவும், அதோடு மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு  சென்ற மாணவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது மாணவி பூச்சிமருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு மாணவியின் தற்கொலை குறித்து கடிதம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top