ரயில் அடியில் சிக்கிய மாணவி: ஆந்திராவில் பரபரப்பு!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அடுத்த அன்னவரம் பகுதியில் வசித்து வருபவர் 20 வயதான சசிகலா. இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்சிஏ படித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவி தினமும் ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அதன் இருபகுதியாக நேற்றைய தினத்திலும் மாணவி குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸில் வழக்கம் போல் கல்லூரி சென்றதாக தெரிகிறது.

புயல் எச்சரிக்கை: பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!

அப்போது ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் மாணவி எதிர்பாராத விதமாக கால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவியில் இடுப்பு பகுதி பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கியுள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரயில் ஓட்டுனருக்கு தெரிவித்தனர். அப்போது உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மாணவி பத்திரமாக மீட்கப்பட்டார்.

அங்கன்வாடி உணவில் பல்லி: 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

பின்னர் மாணவியை கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதன் காரணமாக ரயில் தாமதமாக புறப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தினால் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.