மீண்டும் அதிர்ச்சி..!!! ஆன்லைன் ரம்மியால் மாணவர் தற்கொலை!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடைசெய்ய பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையாண்டிபட்டி பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவரது 22 வயதான மகன் சந்தோஷ் தனியார் கல்லூரில் படித்து வந்துள்ளார்.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்… 8 பேர் சடலமாக மீட்பு!!!

இதற்கிடையில் சந்தோஷ் ஆன்லைன் ரம்மி விளையாடி அதிகளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் நேற்று முன் தினம் வீட்டில் இருந்த நகை, பணம் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த பெற்றோர் மாணவனை கண்டித்துள்ளனர். இந்த சூழலில் இன்று அதிகாலையில் ரயில் முன் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டார்.

அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் கைது..!!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment