Connect with us

உண்மையிலேயே நீதி வேண்டும் என்றால் அன்றைய தினமே வீடியோ வெளியிட்டிருக்கலாமே? மாணவி தற்கொலை-தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

உயிரிழப்பு

தமிழகம்

நம் தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.  இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

விசாரணை முழுமையாக, முறையாக வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பு வாதம் புரிந்தது. மாணவி வீடியோவை எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வில்லை என்றும் அரசின் தரப்பிலிருந்து வாதம் புரிந்தது.

அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் பிரச்சினை உருவாக்கவே மாணவியின் இறப்பிற்குப் பிறகு வீடியோ பரப்பப்படுகிறது என்றும் தமிழக அரசு ஐகோர்ட் கிளையில் வாதம் புரிந்தது.

உண்மையில் நீதியை விரும்பியிருந்தால் வீடியோவை எடுத்து அன்றே பரப்பி இருக்கலாமே? என்று தமிழக அரசு கேள்வி கேட்டுள்ளது. மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு அரசியலாக்க படுகிறது என்றும் பள்ளி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top