Connect with us

நீட் எழுதிய மாணவர் திடீர் மாயம்: குறைவான மதிப்பெண் என பயம்!

Tamil Nadu

நீட் எழுதிய மாணவர் திடீர் மாயம்: குறைவான மதிப்பெண் என பயம்!

b9853f476f6ef6c1c93766eb9dfdc303

 நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீரென மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் இவர் சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுதினார்.

இந்த நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும் என கடந்த சில நாட்களாக அவர் சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார். இதனை அடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவர் விக்னேஷ் தேடிவருகின்றனர். இந்தநிலையில் மாணவர் விக்னேஷ் தனது டைரியில் பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான் உண்மையை கூற எனக்கு பயமாக இருக்கிறது. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கோ, உங்களை அப்பா அம்மா என்று அழைப்பதற்கோ எனக்கு தகுதி இல்லை. 

சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் வீட்டை விட்டு செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் என் வெற்றிப் பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன். என்னை தேட வேண்டாம். இன்னும் சில வருடங்களில் திரும்பி வருவேன் வெற்றி பெற்றவனாக இது சத்தியம். இப்படிக்கு உங்கள் அன்பு மகன்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top