மாணவி சத்யா கொலை வழக்கு: இளைஞர் மீது குண்டாஸ்!

கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

அதன் ஒரு பகுதியாக சதீஷை ஒரு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கைதான சதீஸ் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பரிந்துறைத்தார்.

திண்டுக்கலில் பயங்கரம்: 4-வயது சிறுமி மர்ம மரணம்..!!

தற்போது கைதான சதீஸ் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment